
வேப்பூர் அருகே வேனும் ,லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
15 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.காயமடைந்தவர்
கடலூர் மாவட்டம் வேப்பூரில் இருந்து விருத்தாச்சலம் செல்லும் சாலையில் என்.நாரையூர் கிராமத்தின் அருகில் வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
திருச்சியில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டிற்கு சிதம்பரம் அருகே வில்லியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 25 பேர் வேனில் சென்று திரும்பி சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது வேப்பூர் அடுத்த என்.நாரையூர் அருகில் வேனும் எதிரில் வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் உத்தரகுமார் யுவராஜ் அன்புசெல்வன் ஆகிய மூன்று பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிர் இழந்தனர்.
மேலும் இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 15 இருக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் காயமடைந்தவர்களை போலீசார் மீட்டு வேப்பூர் மற்றும் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பி வைத்து விபத்து குறித்து வேப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

