Lok Sabha Elections 2024: தென்காசி தொகுதியில் 26 வேட்பு மனுக்கள் ஏற்பு!

Advertisements

தென்காசியில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டதில் 26 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகத் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கமல் கிஷோர் தெரிவித்தார்.

இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வருகின்ற 19ஆம் தேதி முதற்கட்டமாகத் தமிழகத்தில் நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 37 வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. நேற்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்ற நிலையில் பரிசீலணையின்போது 26 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 11 வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது .26 வேட்பு மனுவில் ஒரு வேட்பாளர்கள் இரண்டு முதல் நான்கு வரை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

வேட்பு மனு வாபஸ் பெரும் தேதியில் எத்தனை மனுக்கள் வாபஸ் பெறுகின்றபோது அதைப் பொறுத்து வேட்பாளர்கள் இறுதி செய்யப்படும் எனத் தகவல்  அதிமுக கூட்டணி கட்சியான புதிய தமிழகம் கட்சி சார்பில் போட்டியிடும் அதன் நிறுவனத் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதே போன்று பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சியான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் மனுவும் இந்தியா கூட்டணி சார்பில் திமுக கட்சியின் வேட்பாளர் மருத்துவர் ராணி ஸ்ரீகுமார் மனுவும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் இசை மதிவாணன் மனுவும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளர் உமா மகேஸ்வரி மனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது பொதிகை அறக்கட்டளை சார்பில் சுயேட்சையாகப் போட்டியிடும் கனகாவின் மனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *