Lok Sabha Elections 2024: வேட்புமனுவில் குளறுபடி..ஆ.ராசா வேட்புமனு நிறுத்திவைப்பு!

Advertisements

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த ஆ.ராசாவின் வேட்புமனுவில் குளறுபடி இருப்பதாகத் தேர்தல் அதிகாரியிடம் பாஜகவினர் முறையிட்டதையடுத்து ஆ.ராசா வேட்புமனு பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 20 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், நேற்று வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. இதனையடுத்து தமிழகத் முழுவதும் 39 தொகுதிகளில் வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் வட சென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதி ஆகியோரின் வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியநிலையில், திமுகவிற்கு அடுத்த அதிர்ச்சியாக நீலகிரி தொகுதியில் போட்டியிடும் ஆ.ராசாவின் வேட்புமனு பரிசீலனையும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்

நீலகிரி தொகுதியில் 33 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையின்போது பாஜகவின் எல்.முருகன் மற்றும் நாம் தமிழர் வேட்பாளர் ஜெயக்குமார் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதே நேரத்தில் திமுக வேட்பாளர் லோகேஷ் மற்றும் அதிமுக வேட்பாளர் லோகேஷ் மனுவில் குளறுபடி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து  அந்த வேட்புமனு மீதான பரிசீலனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து வேட்புமனு மீது விளக்கம் அளிக்கப்பட்டதையடுத்து ஆ.ராசாவின் வேட்புமனு ஏற்றக்கொள்ளப்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *