தமிழ் கலாச்சாரத்தின் அடையாளமாகத் திகழ்ந்தவர் திருவள்ளுவர் – மோடி புகழாரம்.!

தமிழ் கலாச்சாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர் திருவள்ளுவர் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பாரதப் பிரதமர் திருவள்ளுவர் தினமான இன்று, ஏராளமான மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் படைப்புகளையும் சிந்தனைகளையும் கொண்ட பன்முக ஆளுமை கொண்ட திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து நல்லிணக்கமும் கருணையும் நிறைந்த ஒரு சமூகத்தின் மீது நம்பிக்கை வைத்தவர் என்றும் தமிழ்க் கலாச்சாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர் திருவள்ளுவர் என்றும் தெரிவித்தார்.

இத்தகைய பெருமைக்குரிய திருவள்ளுவப் பெருந்தகையின் சிறப்பான அறிவாற்றலை வெளிப்படுத்தும் திருக்குறளை இந்திய மக்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்று தான் கேட்டுக் கொள்வதாகவும் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *