Lok Sabha Elections 2024: திமுக வேட்பாளர் உத்தேச பட்டியல் வெளியீடு!

திமுக கூட்டணியைப் பொறுத்தவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டினம், திருப்பூர் தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குச் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் புதியதாக இணைந்த மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மட்டும் தொகுதிகள் ஏதும் ஒதுக்கப்படாத நிலையில் ராஜ்யசபா எம்பி சீட் வழங்கப்பட்டுள்ளது.மேலும் மதிமுகவுடன் ஒரு தொகுதியும், காங்கிரஸ் கட்சி உடன் 10 தொகுதிகளும் கையெழுத்தான நிலையில்  இவர்களுக்கான தொகுதிகள் எது என்பதும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு தாமதம் ஆகலாமெனத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தநிலையில் தற்போது திமுக உத்தேச வேட்பாளர்கள் பட்டியல்:-

வடசென்னை- கலாநிதி வீராசாமி
தென் சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன்
மத்திய சென்னை – தயாநிதி மாறன்
ஸ்ரீபெரும்புதூர் – டிஆர்.பாலு
காஞ்சிபுரம் – செல்வம்
அரக்கோணம்- ஜெகட்ரட்சகன்-வினோத் காந்தி
திருவண்ணாமலை – சி.என்.அண்ணாதுரை
வேலூர்- கதிர் ஆனந்த்
தருமபுரி – செந்தில் குமார்- வழக்கறிஞர் ஆ.மணி
பெரம்பலூர் – அருண்நேரு
கள்ளக்குறிச்சி – கவுதமசிகாமணி – சிவலிங்கம்
ஈரோடு – பிரகாஷ்
சேலம் – செல்வகணபதி – பி.கே.பாபு
நீலகிரி – ஆ.ராசா
கோவை – மகேந்திரன்
தஞ்சாவூர்- எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்- அஞ்சுகம் பூபதி
தென்காசி – தனுஷ்குமார் – துரை – முத்துசெல்வி
ஆரணி – தரணி வேந்தன்
நெல்லை- கிரகாம்
நெல்லை-அலெக்ஸ் அப்பாவு
தூத்துக்குடி – கனிமொழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *