Lok Sabha Elections 2024: துரை வைகோ ம.தி.மு.க. வேட்பாளராக அறிவிப்பு!

Advertisements

திருச்சி தொகுதியில் யார் போட்டியிட வேண்டும், பாராளுமன்ற தேர்தல் பணிகள், கூட்டணி கட்சிக்காகப் பிரசாரம் செய்தல் தொடர்பாகக் கூட்டத்தில்திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளராக அக்கட்சியின் முதன்மை செயலாளரான துரை வைகோ அறிவிக்கப்பட்டார்.

சென்னை: பாராளுமன்றத்துக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி முதல் ஜூன் மாதம் 1-ந் தேதிவரை 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது.

முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் தொடங்குகிறது. இதனால் நாடு முழுவதும் பாராளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது.

தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலைத் தி.மு.க. கூட்டணி தனது தோழமைக் கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்று டன் இணைந்து எதிர்கொள்கிறது.

இந்தநிலையில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.விற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. திருச்சி தொகுதியைக் காங்கிரஸ் பிடிவாதமாகக் கேட்டதால் ம.தி.மு.க.விற்கு தொகுதியை இறுதி செய்ய முடியாமல் தாமதம் ஆனது. இறுதியில், திருச்சி தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ம.தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டம் அவை தலைவர் அர்ஜூனமூர்த்தி தலைமையில் இன்று நடந்தது. பொதுச் செயலாளர் வைகோ மற்றும் மாநில நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

திருச்சி தொகுதியில் யார் போட்டியிட வேண்டும், பாராளுமன்ற தேர்தல் பணிகள், கூட்டணி கட்சிக்காகப் பிரசாரம் செய்தல் தொடர்பாகக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இறுதியில் துரை வைகோவை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்தினார்கள். இதனையடுத்து, திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளராக அக்கட்சியின் முதன்மை செயலாளரான துரை வைகோ அறிவிக்கப்பட்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *