Nadigar Sangam: நடிகர் சங்க கட்டிடம் வேலைகள் இந்த வருட இறுதிக்குள் முடிந்து விடும்!

இந்த வருட இறுதிக்குள்  நடிகர் சங்க கட்டிடம் வேலைகள் முடிந்து விடும்,  நடிகர் சங்க கட்டிடம்  75% வேலை முடிந்து விட்டதாகவும் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய  பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தனியார் நட்சத்திர விடுதியில் சமூக ஆர்வலர்கள் மற்றும் சாதனையாளர்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சாதனை ஆண்கள் மற்றும் பெண்களுக்கான  விருதுகள் வழங்கிக் கவுரவிக்கப்பட்டனர்

இந்நிகழ்ச்சியில் திரைப்பட  நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கலந்து கொண்டு சாதனை யாளர்களுக்கு விருதுகள் வழங்கிப் பாராட்டினார்.மேலும்கல்வித்துறை, காவல்துறை, அழகுக்கலை நிபுணர்கள், தையல்காரர்கள் எனப் பல துறைகளைச் சார்ந்தவர்களும் சாதனை படைத்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஹெச் ஆர் டபிள்யூ எஃப் விருது வழங்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்ச்சி நிறைவடைந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன்
என்னுடைய நண்பர் ஷேக் HRWF அமைப்பின் மூலம் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

அதில் நான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு    விருதுகள் வழங்க வேண்டும் என அழைத்ததின் பேரில் வந்தேன்.இங்கு வந்து  பார்த்தால் மிகவும் பிரமாண்டமாக இருக்கிறது மிகவும் நிறைவாக இருக்கிறது  அவருடைய வளர்ச்சி மென்மேலும் வளர வேண்டும் எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *