இந்தியா வந்தார் ஜப்பான் பிரதமர் சானே தகாய்ச்சி!

இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணமாக வந்துள்ள ஜப்பான் பிரதமர் சானே தகாய்ச்சிக்கு விமான நிலையத்தில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜப்பான் பிரதமர் சானே தகாய்ச்சி அரசுமுறைப் பயணமாகத் தனி விமானத்தில் தில்லிக்கு வந்துள்ளார். விமான நிலையத்தில் அவரை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வரவேற்றார். இன்று தில்லியில் நடைபெற உள்ள இருநாடுகள் இடையான ஆண்டுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், ஜப்பான் பிரதமர் சானே தகாய்ச்சியும் கலந்துகொண்டு பேச்சு நடத்த உள்ளனர்.
அப்போது எரிவாயுத் தட்டுப்பாட்டைப் போக்க அதைத் தேக்கி வைப்பது, வழங்கல் சங்கிலியில் பாதிப்பு இல்லாமல் பாத்துக்கொள்வது குறித்து இரு நாடுகள் இடையே உடன்பாடு கையொப்பமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *