Lok Sabha Election 2024: ஓபிஎஸ்-ஐ தோற்கடிக்க பழனிசாமி வியூகம்!

பாஜக கூட்டணி சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். அதிமுக தொண்டர்கள் தன் பக்கம் தான் இருக்கிறார்கள் என்பதை நிரூபிப்பதற்காக ராமநாதபுரம் தொகுதியில் மட்டும் போட்டியிடுவதாகப் பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். அவர் வெற்றிபெற்றுவிடக் கூடாது என்பதில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உறுதியாக இருப்பதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதற்காக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ராமநாதபுரம் தொகுதியில் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். மேலும் நேற்று முன்னாள் எம்பி எம்.எஸ்.நிறைகுளத்தான், காங்கிரஸில் இருந்து விலகி நேற்று முன்தினம் அதிமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ மலேசியா எஸ்.பாண்டியன், எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் எஸ்.எம்.சாமிநாதன் ஆகிய 3 பேரைக் கூடுதலாகத் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாகப் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதன் மூலம் ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. ஓபிஎஸ்ஸை தோற்கடிப் பதில் பழனிசாமி தீவிரமாக உள்ளதாக அதிமுகவினர் தெரிவித்தனர்.

காங்கிரஸில் இருந்து விலகி நேற்று முன்தினம் அதிமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ மலேசியா எஸ்.பாண்டியன், எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் எஸ்.எம்.சாமிநாதன் ஆகிய 3 பேரைக் கூடுதலாகத் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாகப் பழனிசாமி அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *