கமல்ஹாசனின் முடிவு என்னை நெகிழ வைத்துவிட்டது – ஸ்டாலின்.!

Advertisements

மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசனின் முடிவு என்னை மிகவும் நெகிழ வைத்துவிட்டது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில் அன்பும் பண்பும் கொண்ட தனது நண்பரும் மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன் அண்ணா அறிவாலயத்தில் தன்னைச் சந்தித்து, நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்போம் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து, இரண்டு அரசியல் இயக்கங்களின் தலைவர்களாக மட்டுமல்ல, நல்ல நண்பர்களாக தாங்கள் இருவரும் இருதரப்புக் கருத்துகளையும் பரிமாறிக் கொண்டோம். இது தியாகம் அல்ல, கடமை என்று அவர் சொன்னார். ஆனால் உண்மையில் அவர் செய்திருப்பது தியாகம்தான். மேலும், அவருக்கு தான் எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. அவரது முடிவு என்னை மிகவும் நெகிழ வைத்துவிட்டது என்று தெரிவித்தார்
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *