Lok Sabha Election 2024: பொது வேட்பாளரை நிறுத்தச் சுயேச்சை எம்எல்ஏ நேரு திட்டம்!

Advertisements

மாநில உரிமையை மீட்டெடுக்க, பாராளுமன்ற தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாகச் சுயேச்சை எம்எல்ஏ நேரு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாகச் சுயேச்சை எம்எல்ஏ நேரு தலைமையில் ஆலோசனை கூட்டம் அண்ணா சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் நடைபெற்றது.இதில் 100க்கும் மேற்பட்ட பொதுநல அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ நேரு, இந்தியாவில் உள்ள பல யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு மாநில அந்தஸ்து வழங்கியுள்ள நிலையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்காமல் துரோகம் துரோகம் வருகிறது. மத்தியில் காங்கிரஸ், பாஜக என எந்த ஆட்சி வந்தாலும் மாநில அந்தஸ்து வழங்காமல் புதுச்சேரிக்கு தொடர்ந்து வஞ்சித்து வருகின்றன. புதுச்சேரி நிதி குழுவில் சேர்க்கவில்லை என்றும் கடனத் தள்ளுபடி செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

முதலமைச்சர் ரங்கசாமி, முழுக்க முழுக்க பாஜகவின் கைப்பாவியாக மாற்றப்பட்டுள்ளார் என்றும் ஆட்சியில் என்ன நடக்கிறது என்பது கூடத் தெரியாமல் பரிதவித்து வருகிறார் என்றார். இதனால் புதுச்சேரி அரசியலில் வெற்றிடம் இருப்பதை மக்கள் உணருகிறார்கள் என்றும் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி மக்களின் உரிமையை மீட்டெடுக்க ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *