L. Murugan: விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை!

சினிமா மட்டுமின்றி தேசத்திற்கு அர்ப்பணித்த தலைவராக கேப்டன் விஜயகாந்த் திகழ்ந்தார். அவருக்கு மத்திய அரசு பத்மபூஷன் வழங்கி கௌரவித்துள்ளது  என்று மத்திய இணையமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேடு  தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மரியாதை செலுத்தினார்.

பின்னர் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களை சந்தித்து பேசினார்.அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது மரியாதைக்குரிய கேப்டன் உலகத்தை விட்டு சென்று 31 வது நாள். இந்த தருணத்தில் கேப்டன் தலைசிறந்த சமூக சேவகராக, தன்னுடைய சொத்துக்களை மக்களுக்கு கொடுத்தவர், தமிழ் சினிமாவின் முக்கிய கதாநாயகனாகத் திகழ்ந்தார் எம்ஜிஆருக்கு பிறகு கருப்பு எம்ஜிஆராக திகழ்ந்தார்.

அவர் திரைப்படங்களில் தேசபக்தி மக்களுக்கு கொண்டு செல்லும் கதாபாத்திரமாக, சிறந்த காவல் துறை அதிகாரியாக, லஞ்ச லாவண்யங்களை எதிர்க்கக்கூடிய கூடிய அதிகாரியாக முன்னுதாரணமாக திகழ்ந்தார்.

சினிமா மட்டுமின்றி தேசத்திற்கு அர்ப்பணித்த தலைவராக கேப்டன் விஜயகாந்த் இருந்தார்.அவரது சேவையை பாராட்டி மத்திய அரசாங்கம் பத்மபூஷன் விருதை அறிவித்து பாராட்டி இருக்கிறது.மக்களுக்கு முன்னுதாரணமாக தலைவராக இருந்தார். அவரது புகழ் பரவ வேண்டும்.
பிரதமர் மோடிக்கு, கேப்டன் மீது தனிப்பட்ட முறையில் மரியாதையும் அன்பும்  உள்ளது. கேப்டனும் பிரதமர் மீது மிகுந்த மரியாதை உடையவர். அப்படிப்பட்ட தலைவரை பெருமை சேரத்திருக்கிறோம்.

பத்ம பூசன் விருது ன குறித்து பிரேமலதா விஜயகாந்த் கூறிய கருத்து தொடர்பான கேள்விகளுக்கு, அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். நான் பார்க்கும் போது கூட சொன்னாங்க. எந்த நேரத்தில் யாருக்கு கொடுக்க முடியுமோ அதை சரியான நேரத்தில் லேட்டாக வந்தாலும் கூட லேட்டஸ்டாக கேப்டனுக்கு  உயரிய விருதை கொடுத்து பிரதமர் கௌரவித்துள்ளார்.ராமர் கோவில் குறித்து செய்தியாளர் எழுதிய கேள்விக்கு இந்த இடத்தில் அந்த பதிவு தேவையில்லை என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *