
ஆர்டர் செய்த மீன் பிரியாணியில் பல்லியின் வால் இருந்ததாக புகார் எழுந்த நிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபகாலமாக இது போன்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. என்றாலும் மக்கள் ஆர்டர் செய்வதை விட்டபாடில்லை . வீட்டு சாப்பிட்டில் அலுத்துப்போன மக்கள் ஒரு நாளைக்கு மாறுதலுக்காக ஒட்டலில் ஆர்டர் செய்து சாப்பிடுவது வழக்கமாகி விட்டது.
பிரியாணி மட்டுமா வரும். அதில் கரப்பான் பூச்சிகளும் பல்லிகளும், சில சமயங்களும் எலிகளும் கூட இருப்பதை அதிகமாக பார்க்க முடிகிறது. இறந்த பூச்சி புழுக்கள் இருக்கும் செய்திகள் அன்றாடம் வந்து கொண்டே உள்ளது.
ஐதராபாத்தில் மீன் பிரியாணி ஆர்டர் செய்த பாக்கெட்டில் பல்லியின் வால் இருந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ஐதராபாத்தில் உள்ள டெக்கான் எலைட் உணவகத்தில் இருந்து ஆர்டர் செய்யப்பட்ட மீன் பிரியாணியில் பல்லியின் வால் இருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.
ஆர்டர் செய்யப்பட்ட மீன் பிரியாணியில் பல்லியின் வால் இருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. உணவகத்தின் உரிமையாளர் ஒருவர், இது பல்லியின் வால் அல்ல, அது ஒரு வகை மீன் என்று மறுத்துள்ளது தான் வேடிக்கையான விசயம்.
செய்தி அறிந்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள், டெக்கான் எலைட் உணவுகத்திற்கு சென்று பிரியாணியின் மாதிரிகளைச் சேகரித்தனர். ஹோட்டல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உணவை ஆர்டர் செய்த நபர் வலியுறுத்தி உள்ளார். மேலும் பிரியாணி சாப்பிட்ட 8 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஐதராபாத்தில் உள்ள மெரிடியன் உணவகத்தில் இருந்து ஆர்டர் செய்த மட்டன் பிரியாணியில் கரப்பான் பூச்சி இருப்பதாக நெட்டிசன் ஒருவர் கடந்த செப்டம்பர் மாதம் இது போன்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். குற்றங்களும் புகார்களும் பழகிப்போன ஒன்றாகிவிட்டது. வீட்டில் சமைத்து சாப்பிடுவது தான் சிறந்தது. திருந்தினால் சரி தான்.

