Surya Namaskar: குஜராத் கின்னஸ் சாதனை!

குஜராத்தில் ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பேர் சூரிய நமஸ்காரம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

சூரிய நமஸ்காரத்தை உங்கள் அன்றாட வழக்கத்தில் ஒன்றாக பின்பற்றுமாறு பிரதமர் மோடி அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

குஜராத்தில் ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பேர் சேர்ந்து சூரிய நமஸ்காரம் செய்தனர். இந் நிகழ்வானது தற்போது கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

சூரிய நமஸ்காரத்தில் முதல்-மந்திரி பூபேந்திரபாய் பட்டேல் பங்கேற்றார். மோதராவில் உள்ள  சூரியக் கோவிலில் இந்த புத்தாண்டையொட்டி காலையில் இந்த சாதனை செய்து மக்கள்  அசத்தினர்.

கின்னஸ் உலக சாதனை நடுவர் ஸ்வப்னில் தங்காரிகர் நிறையப் பேர் சூரிய நமஸ்காரம் செய்யும் சாதனையைப் பரிசோதிக்க வந்துள்ளேன். இதுவரை இத்தகைய சாதனையை யாரும் செய்ததில்லை. மிகவும் நேர்த்தியாக இருந்ததாக தெரிவித்தார்.

மொதேராவில் நடைபெற்ற சூர்ய நமஸ்கார  செயலில் சுமார் 4 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் சூரிய நமஸ்காரத்தைச் செய்துள்ளனர். 51 வெவ்வேறு ஊர்களில் 108 இடங்களில் சுமார் 4 ஆயிரம் மக்கள், சூரிய நமஸ்காரம் செய்துள்ளனர் என்று கின்னஸ் உலக சாதனை நடுவர் ஸ்வப்னில் தங்காரிகர்  கூறியுள்ளார்.

மேலும் குஜராத் உள்துறை மந்திரி சங்வி இது பற்றி கூறும் போது, இன்று குஜராத்ம்மாநிலம் , இந்தியாவிலேயே  முதல் உலக சாதனை படைத்துள்ளது என்று பெருமிதம் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற யோக தின நாளில் (ஜூன் 21) குஜராத் மாநிலம் கின்னஸ் சாதனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-

குஜராத் 2024 ஐ ஒரு  கின்னஸ் சாதனையுடன் வரவேற்றுள்ளது. 108 இடங்களில் ஒரே நேரத்தில் அதிக மக்கள் சூரிய நமஸ்காரம் செய்து உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். நமக்கு தெரிந்தபடி, 108 என்ற எண் நமது கலாச்சாரத்தில் ஒரு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த வகையில் மோதேரா சூரியன் கோயிலும் அடங்கும், அங்கு அனைவரும் ஒன்று கூடி உலக சாதனை படைத்துள்ளனர். யோகா மற்றும் நமது கலாச்சார பாரம்பரியத்தின் மீதான நமது அர்ப்பணிப்புக்கு இது ஒரு உண்மையான சான்றாகும். மக்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

சூரிய நமஸ்காரத்தை  தவறாமல் செய்ய வேண்டும். அப்படி செய்வதால் பலப்பல நன்மைகள் உடலுக்கும் உள்ளத்திற்கும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *