Advertisements

போதை பழக்கம் மற்றும் பெண்கள் சகவாசத்தால் தனது மனைவியை நடிகர் ஸ்ரீகாந்த் பிரிந்து வாழும் அதிர்ச்சி தகவல் வெளியே தெரிய வந்துள்ளது
கோகைன் எனப்படும் போதை பொருளை பயன்படுத்திய வகையில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
போதை பொருளை தான் பயன்படுத்தி வந்தது உண்மைதான் என காவல்துறையில் வாக்குமூலம் கொடுத்துள்ள ஸ்ரீகாந்த் நீதிமன்றத்தில் மேலும் பல தகவல்களை தெரிவித்துள்ளார் அந்த தகவல்கள் சினிமா ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது . போதை பொருள் பயன்படுத்தியது தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்த் கூறும் போது எனது சொந்த ஊர் ஆந்திர மாநிலம் திருப்பதி அங்குதான் எனது தந்தை வங்கி அதிகாரியாக இருந்தார் என் தாயார் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் நான் எம் சி ஏ படித்திருக்கிறேன் ரோஜா கூட்டம் பார்த்திபன் கனவு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறேன்
சினிமாவில் மிகப்பெரிய வெற்றியடைய முடியாத நான் சொந்த வாழ்க்கையிலும் தோல்விகளை தழுவி வந்தேன் எனக்கு பெண்கள் சவகாசம் அதிகம் உண்டு . திருமணத்துக்கு முன் நடிகை ஒருவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்து அவருடன் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு சென்றபோது வந்தனா எனக்கு அறிமுகமானார் . அவரை காதலிக்க தொடங்கி மிகப்பெரிய சர்ச்சைகளுக்கு பிறகு 2007 ஆம் ஆண்டு எங்கள் திருமணம் நடந்தது எங்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் இருக்கிறார்கள்
எங்களின் மன வாழ்க்கை சரியாக அமையவில்லை என் தவறான நடத்தை காரணமாக சென்னை திருவான்மியூரில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தனா அடிக்கடி சென்று விடுவார் .தற்போதும் நாங்கள் பிரிந்து தான் வாழ்கிறோம் மகள் வந்தனாவுடனும் மகன் என்னுடனும் இருக்கிறார்கள் நடிகர் நடிகைகள் நடத்தும் இரவு பார்ட்டிகளில் பங்கேற்ற போது எனக்கு கோகையின் பழக்கம் ஏற்பட்டது அதற்கு அடிமையாகும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டேன். கோகையின் விற்பனை செய்பவரை தேடி போய் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன் . இதன் காரணமாக சில ஆண்டுகளுக்கு முன் ஓட்டல் ஒன்றில் தகராறும் ஏற்பட்டது .
Advertisements


