Leo Vinayagar: ஒரு கையில் கத்தியோடு லியோ விநாயகர் சிலை!

தமிழகத்தில் விநாயகர் சதூர்த்தியானது வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பொது இடங்களில் வைக்கப்படும் சிலைகள் பல புதுமையான வழிகளில் கவரும் வகையில் ஆங்காங்கே வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

இதன் ஒரூபகுதியாக வடசென்னை கொருக்குப்பேட்டையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பாக இரண்டு விநாயகர் சிலையானது தற்போது பக்தர்களின் வழிப்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது.

வெகுவிரைவில் திரைக்கு வரவிருக்கும் விஜயின் லியோ படத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வைக்கப்பட்டிருக்கும் இந்தச் சிலையில் காப்போடு விஜய் லோகேஷ் கணகராஜோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஒரு சிலையும், டீசரில் வெளியான ப்ளடீ ஸ்வீட்டி என்ற வசனத்தைப் பிரதிபலிக்கும் வகையில் டீசரில் வருவதை போலவே விநாயகர் சிலையின் ஒரு கையில் கத்தியும் மறு கையில் சுண்டு விரல் வாயிலும் வைத்தபடி இந்தச் சிலை விஜய் மக்கள் இயக்கத்தினறால் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிலையானது கவரும் வகையில் இருந்தாலும் மனமுருக வேண்டி வழிபட வேண்டிய கடவுளை நடிகரோடு ஒப்பிடும் படியாகச் சிலை வைத்திருப்பது புதுமை என்ற பெயரில் சலசலப்பை ஏற்படுத்துவதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர்.

இது போன்ற சிலைகள் வைப்பது விழாவைக் கொண்டாடுவதற்காகவா அல்லது சிலை ட்ரெண்டாகவா? என்ற கேள்வியைத் தற்போது எழுப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *