
நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைத் திரையிடப் புதுச்சேரி அரசு அனுமதி அளித்துள்ளதாக ஆட்சியர் வல்லவன் கூறி உள்ளார்.
ஆனால் 9 மணிக்குப் பதில் 7 மணிக்கு முதல் காட்சியைத் திரையிடலாம என்பதை அரசு பரிசீலனை செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இதனால் 7 மணி காட்சிக்கு அனுமதி கிடைக்குமா என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்த நிலையில், புதுச்சேரியில் லியோ படச் சிறப்புக் காட்சி திரையிட அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக ஆட்சியர் வல்லவன் கூறி இருக்கிறார்.
காலை 7 மணிக்குச் சிறப்புக் காட்சி திரையிட அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக அவர் கூறி உள்ளதால், சென்னையில் உள்ள விஜய் ரசிகர்கள் லியோ படத்தின் FDFS பார்க்கப் புதுச்சேரிக்கு செல்லும் ஐடியாவில் உள்ளனர். லியோ படத்திற்கு கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை 4 மணி காட்சிகள் திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

