Advertisements

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
மும்பையின் வான்கடே மைதானத்தில் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
Advertisements



