Jagan Reddy : ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி இளைஞரணி நிர்வாகி வெட்டிக்கொலை !

ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி நிர்வாகியை வெட்டி கொன்ற சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், பல் நாடு மாவட்டம், விணு கொண்டாவை சேர்ந்த, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி நிர்வாகி ஷேக் ரஷீத் அரசு மதுபான கடையில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்துள்ளார். கடந்த தேர்தலுக்கு முன்பு இவருக்கும், இவருடைய நண்பர் ஷேக் ஜிலானி என்பவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று இரவு மதுபான கடையில் வேலை முடிந்து வீட்டுக்கு புறப்பட தயாரானா ஷேக் ரஷீதை, ஷேக் ஜிலானி தான் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனைகண்ட பொதுமக்கள் ஷேக் ரஷீத்தை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ரஷீத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் தகவலறிந்து வந்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து செய்து ஷேக் ஜிலானியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *