Chennai Suburban Railway: ரெயில் சேவைகள் ரத்து!

Advertisements

இரவு நேர மின்சார ரெயில் சேவைகள் ரத்து!

சென்னை எழும்பூர் – விழுப்புரம் வழித்தடத்தில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணியின் காரணமாக இரவு 12.25 முதல் 2.25 வரை 2 மணி நேரத்திற்கு மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரையிலிருந்து இரவு 11.59 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரெயில் சேவை இன்று (8-ந்தேதி), 9, 10, 13, 14, 15, 16, 17, 19, 20, 21, 22, 23, மற்றும் 24 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, தாம்பரத்திலிருந்து இரவு 11.40 மணிக்கு சென்னை கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரெயில் சேவை இன்று (8-ந்தேதி), 9, 10, 13, 14, 15, 16, 17, 20, 21, 22, 23, மற்றும் 24 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

மேலும், தாம்பரத்தில் இருந்து இரவு 11.35 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரெயில் சேவை 19-ந்தேதி ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *