Ladakh:ராணுவ டாங்கி விபத்தில் சிக்கி 5 வீரர்கள் மரணம்!

லடாக் பகுதியில் உள்ள சீன எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் இராணுவ வீரர்கள் பயணித்த வாகனம் மூழ்கியதால் 5 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஆற்றைக் கடக்க முயன்றபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து கொள்கிறேன். அவர்களின் குடும்பத்தினருக்கு இந்தத் தேசம் துணைநிற்கிறது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

அதிகாலை 1 மணியளவில் டி- 72 டேங்க் வாகனத்தில் ராணுவ வீரர்கள் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *