Uttar Pradesh:ஆசிரியை படுக்கைக்கு அழைத்த 10 ஆம் வகுப்பு மாணவர் – ஆசிரியை எடுத்த விபரீத முடிவு!

Advertisements

ஆசிரியை உடைமாற்றும் வீடியோவை வைத்து 10 ஆம் வகுப்பு மாணவர் படுக்கைக்கு அழைத்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள பள்ளியில் 26 வயது பெண் ஆசிரியை ஒருவர் பணி புரிந்து வருகிறார். கல்வியில் பின்தங்கி இருக்கும் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக, வீட்டில் இலவசமாக டியூசனும் எடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவரிடம் டியூசனுக்கு வரும் 10 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர், ஆசிரியை உடை மாற்றுவதை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார்.

இந்த வீடியோவை ஆசிரியையிடம் காட்டி படுக்கைக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் ஆசிரியை அதற்கு இணங்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவன் வீடியோவைத் தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார்.

மேலும் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகிய சமூகஊடகங்களில் இதைப் பகிர்ந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியை அவமானத்திற்கு பயந்து தற்கொலைக்கு முயன்ற ஆசிரியை மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், 10 ஆம் வகுப்பு மாணவர் மற்றும் அவரது 3 நண்பர்களையும் கைது செய்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *