
புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தைக்குத் தாய்ப்பால் மிகவும் முக்கியமானது. வேறு எந்த ஊட்டச்சத்தும் தாய்ப்பாலுக்கு நிகராக வராது. ஆனால் சில இளம் தாய்மார்களுக்குப் பால் சுரப்பதில் சிரமம் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் இந்த ஒரு பொருளைச் சாப்பிட்டால், அவர்களுக்கு நன்றாகப் பால் சுரக்கும்.
குழந்தையைப் பெற்றெடுத்த இளம் தாய்மார்கள், குறிப்பிட்ட காலம்வரை தங்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது அவசியமாகும். ஆனால் எல்லா தாய்மார்களுக்கும் ஒரேப் போன்று பால் சுரப்பதில்லை.
அதற்குக் காரணம் சிலர் மோசமான உணவுப்பழக்கங்களை கொண்டிருக்கலாம்; அல்லது போதுமான ஊட்டச்சத்து இல்லாமல் இருக்கலாம். தாய்மார்களின் பால் சுரப்பை அதிகரிக்க உதவும் பல உணவுகள் நம்மிடம் உள்ளன.
அதை முறையாகச் சாப்பிட்டு வந்தால் உங்கள் குழந்தைக்குத் தேவையான பால் கிடைக்கும்.
புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தைக்குத் தாய்ப்பால் மிகவும் முக்கியமானது. வேறு எந்த ஊட்டச்சத்தும் தாய்ப்பாலுக்கு நிகராக வராது. ஆனால் சில இளம் தாய்மார்களுக்குப் பால் சுரப்பதில் சிரமம் இருக்கும்.
அப்படிப்பட்டவர்கள் இந்த ஒரு பொருளைச் சாப்பிட்டால், அவர்களுக்கு நன்றாகப் பால் சுரக்கும். அது என்னவென்றால்.
பொதுவாகப் பிரசவத்திற்குப் பிறகு தாய்மார்கள் உட்கொள்ளும் உணவைப் பொறுத்தே அவர்களின் பால் உற்பத்தி இருக்கும். அதேசமயம் சில தாய்மார்களுக்கு எதையும் சாப்பிடாமல் இருந்தால் கூட அவர்களிடம் அதிகமாகப் பால் சுரக்கும்.
ஆனால் மற்றவர்களுக்கு இதுபோல் நடப்பதில்லை. இருப்பினும், தாய்மார்களின் பால் உற்பத்தியை அதிகரிக்க உதவும் சில உணவுகள் உள்ளன.
ஒரு தாய் உண்ணும் உணவுகள் அவளுடைய குழந்தையைப் பாதிக்கலாம் என்பதை நினைவில் கொள்வது அவசியம். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், தங்களுக்கும் குழந்தைக்கும் என இருவருக்கும் பாதுகாப்பற்றதாக இருக்கும் எந்த உணவையும் சாப்பிடுவது பாதுகாப்பானது அல்ல. முக்கியமாக காஃபின், சாக்லேட் மற்றும் காரமான உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் வெங்காயம், ப்ரோக்கோலி, காலிஃபிளவர் மற்றும் வெள்ளரி போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இவை வயிற்றுப்போக்கு அபாயத்தை அதிகரிக்கும். அதேசமயம் இளம் தாய்மார்களின் டயட்டில் கண்டிப்பாகச் சேர்க்க வேண்டிய சில உணவுகளும் உள்ளன.
அதுதான் பூண்டு. நம் அன்றாட உணவில் பூண்டு கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும். இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. இதை உணவில் சேர்த்துக் கொண்டால், பாலூட்டும் தாய்மார்களுக்குப் பால் அதிகமாகச் சுரக்கும் என்கின்றனர் பெரியவர்கள்.
பூண்டு சாப்பிடுவது தாய்மார்களுக்கு உண்மையில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. எல்லாரது வீட்டிலும் நீக்கமற இடம்பெற்றிருக்கும் பூண்டை பல வழிகளில் நம் உணவில் சேர்க்கலாம். இருப்பினும், பூண்டை அதிகமாக உட்கொள்வதும் ஆபத்தானது. இதை அளவோடு உட்கொள்வது நல்லது.
பூண்டு குழம்பு செய்து, அதைச் சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். அதுவும் பூண்டில் பல மருத்துவப் பயன்கள் இருப்பதால் மழைக்காலத்தில் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இது இருமல் மற்றும் சளியிலிருந்து நிவாரணம் தருவதாகவும் கூறப்படுகிறது.
