Kunnur: ஆண் சடலம் மீட்பு!

Advertisements

கிளண்டேல் எஸ்டேட் ஆற்றோர பகுதியில் தேயிலை தொழிலாழி மர்மனான முறையில் இறந்துகிடந்த சம்பவத்தில் உறவினர்கள்குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கிளண்டேல் எஸ்டேட் ஆற்றோர பகுதியில் விவசாய பணிக்காக அமைக்கப்பட்டிருந்த தகர செட்டினுள் ஆண் சடலம் கிடப்பதாகக் குன்னூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது,

இதனைத் தொடர்ந்து குன்னூர் இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் சப் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று தகர கொட்டைக்குள் கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காகக் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்,

காவல்துறையின் விசாரணையில் சடலமாகக் கிடந்தவர் பெயர் வர்கீஸ் என்றும் இவர் கேரளா மாநிலம் ஆளுவா பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தனியாக வந்து கிளன்டேல் தனியார் எஸ்டேட்டில் தேயிலை தொழிற்சாலையில் பணிபுரிந்துள்ளார். பின்பு விருப்ப ஓய்வு பெற்றதாகக் கூறப்படுகிறது,

தற்போது கிடைக்கும் வேலைக்கெல்லாம் செல்வது வழக்கமாகக் கொண்ட வர்கீஸ் மதுப்பழக்கம் மற்றும் கஞ்சா பழக்கங்கள் உள்ளவர் என்றும் கூறப்படுகிறது.நேற்றைய முன்தினம் அதிகமாக மது அருந்திவிட்டு காட்டுப் பகுதியில் அமைந்திருக்கும் தகர கொட்டகைக்கு இரவு நேரத்தில் சென்றுள்ளார். அங்கும் இங்கும் விழுந்ததில் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது,

இதனைத் தொடர்ந்து குன்னூர் காவல்துறையினர் சுடலமாகக் கிடந்த வர்கீசின் உறவினர்கள்குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *