Sep 2023 Monthly Rasi Palan: மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

Advertisements


அன்புள்ள மீன ராசி நேயர்களே:

 

உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 6-ல் சூரியன் மாத முற்பாதியில் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும்.

நீங்கள் எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் அதன் முழுப்பலனை தடையின்றி அடைய முடியும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

கடன்கள் படிப்படியாகக் குறையும். ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது. அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். செவ்வாய் 7-ல் இருப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் ஓரளவு ஆதரவாகச் செயல்படுவார்கள்.

திருமணம் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியும்.

தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். கூட்டாளிகளுடன் இருந்த பிரச்சினைகள் விலகும். தொழிலாளர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும்.

தொழில் விருத்திக்காக எதிர்பார்த்த உதவிகள் கிடைத்து உங்கள் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். எதிர்பார்த்த உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.

பரிகாரம்:

ராகு காலங்களில் அம்மன் வழிபாட்டைச் செய்தால் குடும்பத்தில் மங்களங்கள் உண்டாகும். சனிக்கிழமை சனிக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் -17-09-2023 இரவு 11.08 மணி முதல் 20-09-2023 காலை 08.45 மணிவரை.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *