ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் பயங்கரவாதிகள் மூன்று பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டதிலிருந்து, பயங்கராவாத நடவடிக்கைகளை ஒடுக்கும் பணியில் காவல்துறையினரும், பாதுகாப்பு படையினரும் தீவரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகக் குல்காம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாகச் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குல்காமில் உள்ள நெஹாமா பகுதியில் பயங்கராவதிகள் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் இரண்டு நாட்களாகச் சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில், இன்று மூன்று பயங்கரவாதிகளைப் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
அதாவது, இன்று காலைக் குல்காமில் உள்ள நெஹாமா பகுதியில் சாம்னோவில் என்ற இடத்தில் பயங்கராதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்தத் தாக்குதலில் பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் லஷ்கர் இ தொய்பா என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் காவல்துறை தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட 5 பேரிடமிருந்து துப்பாக்கிகள் போன்ற பயங்கர ஆயதங்களும், வெடி பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.