கோவில்பட்டி ரயில் நிலையத்தில் விபத்து..!

Advertisements

கோவில்பட்டி ரயில்வே நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற சென்னையைச் சேர்ந்த இளைஞர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில் நிலையத்தில்,குருவாயூர் எக்ஸ்பிரஸ்’ ரயிலில் ஏற முயன்ற சென்னையைச் சேர்ந்த ரகுமான், எதிர்பாராத விதமாக கால் தடுமாறி தண்டவாளத்தில் விழுந்தார்.  இந்த விபத்தில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ரகுமானை பணியில் இருந்த பெண் உதவி ஆய்வாளர் செல்வி மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இதைத் தொடர்ந்து, அவர்  மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதன் பின்னர் அவரது உடல் உடற்கூறாய்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, தூத்துக்குடி ரயில்வே காவல்துறை உதவி ஆய்வாளர் மகாகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *