அதிகாரிகளை மிரட்டிய அதிமுகவினர்..!

கந்தன்சாவடியில் அதிமுக சார்பில் அனுமதி இல்லாமல் வைத்த விளம்பர பேனரை அகற்றும்படி சென்னை மாநகராட்சி அதிகாரிகள் வலியுறுத்திய நிலையில் அதிமுகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சென்னை கந்தன்சாவடியில் அனுமதி இல்லாமல் அதிமுக சார்பில் வைக்கப்பட்ட விளம்பர பேனரை அகற்றும்படி சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கும் அதிமுக நிர்வாகிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில், அதிமுகவினர் மரியாதை இல்லாமல் தரகுறைவாக ஒருமையில் அதிகாரிகளை பேசியதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் குற்றம் சாட்டினர். அதிமுகவினர் சவால் விட்டு அதிகாரிகளை ஒருமையில் பேசி மிரட்டிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *