கோவில்பட்டி அருகே சோகம் – பட்டாசு விபத்தில் இருவர் பலி!

Advertisements
கோவில்பட்டி அருகே சட்டவிரோதமாகப் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில், இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே புளியங்குளத்தில் உள்ள காட்டுக்கோவில் பகுதியில், தனியாருக்குச் சொந்தமான கட்டிடத்தில் சட்டவிரோதமாகப் பட்டாசு தயாரித்து வந்தனர். இந்நிலையில், இரவில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் அந்தக்கட்டிடம் முற்றிலுமாகத் தரைமட்டமானது.
இந்த விபத்தில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த புளியங்குளத்தைச் சேர்ந்த ஐயப்பன், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாலதி ஆகியோர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், சூர்யபிரகாஷ் என்பவர் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி தீயணைப்பு துறையினர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயமடைந்த சூரிய பிரகாசினை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனைத் தகவல் அறிந்த கோவில்பட்டி வட்டாட்சியர் ஹீயூமன்சூமங்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெகநாதன், தாசில்தார் அப்பனராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *