தில்லி பயணம் – பிரதமர் மோடியைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்!

தமிழக முதலமைச்சர் விஜய் இன்று தில்லிக்கு சென்று பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளார்.

முதலமைச்சராக பதவியேற்றப் பிறகு முதன் முறையாக இன்று தில்லிக்குச் செல்கிறார் தமிழக முதலமைச்சர் விஜய், காலை 9.30 மணிக்குத் தனி விமானத்தின் மூலம் இன்று சென்னையிலிருந்து தில்லிக்குப் புறப்பட்டு செல்கிறார்.

அவர், தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்குச் செல்கிறார். இதன் பின்னர் பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சோனியா காந்தி, ராகுல்  காந்தி உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேச உள்ளார்.

மேலும், தில்லி ஜவர்கஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிற திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *