கோவை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : கொந்தளித்த உதயநிதி..!

கோவையில் 10 வயது சிறுமி, கடத்தி உயிர் மாய்க்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், ஏற்படுத்தி உள்ளது என எதிர்கட்சித் தலைவர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சித் தலைவர் உதயநிதி தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், கோவையில் சிறுமி உயிர் மாய்க்கம் செய்யப்பட்டது தொடர்பாக கண்டன பதிவிட்டுள்ளார். அதில், கோவையில் 10 வயது சிறுமி, கடத்தி உயிர் மாய்க்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது என்று தெரிவித்தார்.

இந்த சம்பவத்துக்கு உண்மையான நீதி வேண்டும் என்ற குரல், எல்லாம் பக்கமும் ஒலிக்கிறது என்றும் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிற இந்த கொடூர சம்பவத்தைக் கண்டித்து, கோவை மக்கள் விடிய விடிய போராட்டம் நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.

இந்த மிருகத்தனமான செயலைச் செய்த உண்மை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை விரைந்து பெற்றுத் தர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இந்த இக்கட்டான நேரத்தில், சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவிப்பதோடு, அவர்களுக்கு துணையாக திமுக நிற்கும் என்று தெரிவித்தார்.

புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து, 30க்கும் மேற்பட்ட பெரிய நிகழ்வுகள் செய்திகளாக வந்து கொண்டே இருப்பது, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளது என்று கூறினார். இனி ஒரு சம்பவம் இதுபோல் நடக்காமல் இருக்க – சட்டம் ஒழுங்கிற்கு முதல் முக்கியத்துவத்தை முதலமைச்சர் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *