கொட்டுக்காளிக்கு கிடைத்த கௌரவம்..!

கேரளாவில் நடைபெற்ற 70 ஆவது ஃபிலிம்ஃபேர் விழாவில் விருதுகளைப் பெற்ற கொட்டுக்காளி படத்தின் இயக்குனருக்கு, நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் 70 ஆவது ஃபிலிம்ஃபேர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில், கொட்டுக்காளி படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான விருதை வினோத்ராஜ் வென்றார். இதையடுத்து, சிறந்த நடிகைக்கான விருதை அன்னா பென் வென்றார்.

இந்நிலையில், கொட்டுக்காளி படத்திற்காக விருது வென்ற வினோத்ராஜ் மற்றும் அன்னா பென் ஆகியோரை நடிகரும் கொட்டுக்காளி படத்தின் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் வாழ்த்துக்களை தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படங்களை கொட்டுக்காளி படக்குழுவினர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *