Koothanallur: புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான பணி துவக்கம்!

கூத்தாநல்லூர் பகுதியில்  15- வது நிதிக்குழு சுகாதார மானியத்தில் 1 கோடியே 50 லட்சம் மதிப்பில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான பணியை நகர்மன்ற தலைவர் பாத்திமா பஷிரா அடிக்கல் நாட்டித் தெடங்கி வைத்தார்.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர்  பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வந்தது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான கட்டிட வசதி இல்லாத காரணத்தினாலும் கர்பிணி பெண்கள் உள்ளிட்ட சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் போதிய இட வசதி இல்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனா்.

இதற்குப் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட வேண்டும் எனக் கூத்தாநல்லூர் பகுதி பொதுமக்கள் , வர்த்தகர்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் நகர்மன்ற தலைவரிடம் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் தமிழக சுகாதாரத் துறை சார்பில்  15-வது நிதிக்குழு சுகாதார மானியத்தில் 1, கோடியே 50 லட்சம் மதிப்பில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதனைதொடா்ந்து  ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி விழா விழாவைத் தொடங்கி கூத்தாநல்லூர் நகர்மன்ற தலைவர் பாத்திமா பஷிரா தெடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் 1, கோடியே 50 லட்சம் மதிப்பில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமான பணியைத் தொடங்கிய தமிழக அரசு மற்றும் சுகதார துறைக்குப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வர்த்தகர்கள் சார்பில் நன்றி தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *