வானத்தை நோக்கிச் சீறிப்பாய்ந்து செல்லும் விண்கலத்தைப் பார்த்த பொதுமக்கள் முதன்முறையாகப் பூமிக்கு திரும்பும் விண்கலத்தை நேரடியாகப் பார்க்கலாம் என்ற ஆச்சரிய தகவல் வெளியாகி உள்ளது. உலகப் புகழ்பெற்ற நாசா விண்வெளி கூடம் கடந்த 2016 ஆம் ஆண்டு விண்ணை நோக்கிஒரு விண்கலனை ஏவியது. அந்த விண்கலனின் பெயர் ஓசரிஸ் ரெக்ஸ் என்பதாகும்.
வானத்திலிருந்து பூமியை நோக்கி ஒரு விண்கல் வேகமாகப் புறப்பட்டு வருவதாக அறிந்த நாசா விண்வெளி கூடம் அதனை ஆராய்வதற்காக இந்த விண்கலனை ஏவியது.நாசாவின் கட்டளைப்படி விண்ணை நோக்கிப் பாய்ந்த ரெக்ஸ் விண்கலன் அந்தவின் கல்லை ஆய்வு செய்தது.
கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி அந்த விண்கல்லை நெருங்கிய நாசா விண்கலன் தனது எந்திர கையால் அங்கிருந்து 60 கிராம் ஆதார துகள்களை எடுத்துக்கொண்டு பூமிக்கு திரும்புகிறது.பூமியிலிருந்து சுமார் 2 கோடி கிலோமீட்டர் தூரம் சென்று திரும்பும் அந்த விண்கலன் மொத்தம் இரண்டு ஆண்டுகள் தனது பணிகளைச் செய்திருக்கிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு தனது ஒட்டு மொத்த பணிகளையும் வெற்றிகரமாக நிறைவேற்றிய ரெக்ஸ் விண்கலன் தற்போது பூமிக்கு திரும்ப வருமாறு கட்டளை இடப்பட்டு இருக்கிறது.அதன்படி இந்த மாதம் அதாவது செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி அந்த விண்கலன் பூமியை நோக்கி வருகிறது.
உட்டா என்ற பெயர் கொண்ட பாலைவனத்தில் அந்த விண்கலன் தரை இறங்குகிறது பாராசூட் மூலம் செல்லும் விஞ்ஞானிகள் அந்த விண்கலத்திலிருந்து முக்கிய பகுதியைப் பிரித்து எடுத்தபடி நாசா விண்வெளி கூடத்திற்கு திரும்புகிறார்கள். இதனை நாசா இணையதளத்திலும் யூடிபிலும் வெளியிட இருக்கிறார்கள். இதன் மூலம் ஒட்டுமொத்த உலக மக்களும் யூ டியூபில் இந்த அரிய காட்சியைக் காணலாம் என்பது மகிழ்ச்சிகரமான செய்தியாகும்.
