Wayanadu Disaster : களத்தில் இறங்கிய பிரியங்கா காந்தி – நிவாரண உதவிகளுக்கு அழைப்பு.!

கேரள மாநிலம் வயநாட்டில் மேப்பாடி அருகே ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தான் துணை நிற்பதாகவும், அவர்களுக்குத் தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் வழங்கத் தயார் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில நிர்வாகத்தின் செயல்பாடுகளைக் கண்காணித்து வரும் பிரியங்கா காந்தி, மீட்புப் பணிகளுக்குத் தடங்கல் ஏற்படாத வகையில் உதவ முன்வருமாறு ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) தொண்டர்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக, அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி அப்பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றதே இந்த அசம்பாவிதத்திற்குத் தொடக்கப் புள்ளியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது, மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *