சிவகாசியில் குவியும் மக்கள்..இறுதிக் கட்டத்தை எட்டிய பட்டாசு விற்பனை..!

Advertisements

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது . இந்நிலையில் , இந்த ஆண்டு தீபாவளி வரும் அக்டோபர் 20-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது .

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அதனைச் சுற்றியுள்ள சாத்தூர் வெம்பக்கோட்டை, ஏழாயிரம் பண்ணை, உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தி பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. சுமார் 2000-க்கும் மேற்பட்ட பட்டாசு விற்பனை கடைகளில் இறுதி விற்பனையும் நடந்து வருகின்றன.

மேலும் , இந்த ஆண்டு தீபாவளிக்கான புதிய ரக பட்டாசுகளான பீட்சா, வாட்டர் மெலன், ஓரியோ பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை நினைவுபடுத்தும் வகையில் பட்டாசுகளும், குழந்தைகளுக்காக கதாயம், வேல், கிட்டார், சிலிண்டர் உள்பட 30க்கும் மேற்பட்ட பல புதுரக பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்நிலையில் தற்போது சிவகாசியில் பட்டாசு விற்பனை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *