Ukraine: அமெரிக்கா உதவி!

Advertisements

எதிர்வரும் குளிர்காலத்தின்போது வான்பாதுகாப்பை வலுப்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி செய்ய ஒப்புக்கொண்டிருப்பதாக ஜெலன்ஸ்கி கூறினார்…

வாஷிங்டன்: உக்ரைன் போரைக் கைவிட்டு அமைதி வழிக்குத் திரும்புவதை விட்டு ஈரான் மற்றும் வடகொரியாவிடமிருந்து ரஷ்யா ஆயுதங்களை வாங்குவது ஐ.நாப்பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீரும் செயல் என்று அமெரிக்கா குற்றம்சாட்டி இருக்கிறது. அமெரிக்கா சென்றிருக்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது மனைவியை அதிபர் ஜோப்பைடன் மற்றும் ஜில் பைடன் வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து ஜோப்பைடன் மற்றும் ஜெலன்ஸ்கி இடையே வெள்ளைமாளிகையின் ஓவல் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது உக்ரைனுக்கு கூடுதலாக ஆயுதங்கள் ராணுவ தளவாடங்கள் வழங்கு குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் பேசிய ஜோப்பைடன் ஈரான் மற்றும் வடகொரியாவிடமிருந்து ரஷ்யா ஆயுதங்களை வாங்குவது ஐ.நாப்பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீரும் செயல் என்று குற்றம் சாட்டினார்.

எதிர்வரும் குளிர்காலத்தின்போது வான்பாதுகாப்பை வலுப்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி செய்ய ஒப்புக்கொண்டிருப்பதாக ஜெலன்ஸ்கி கூறினார். பேச்சுவார்த்தையின்போது உக்ரைனிலிருந்து தானிய ஏற்றுமதியை விரிவு படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தீவிர படுத்த ஒப்புக்கொண்டதாகவும் உக்ரைன் அதிபர் தெரிவித்தார். உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கிய பிறகு ஜோப்பைடன் ஜெலன்ஸ்கி இடையிலான மூன்றாவது சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *