Khalistan movement: பயங்கரவாத வலையில் விழும் இந்திய மாணவர்கள்!

கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்களை  அதிகப்படுத்த, பயங்கரவாதிகள் முயன்று வருவதாக  உளவுத்துறை  தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் உள்ளிட்ட பகுதிகளில் வேலை இல்லாமல் சுற்றித்திரியும் இளைஞர்களைக் குறி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக இந்திய இளைஞர்கள் மூளைச் சலவை செய்து  கனடாவுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக உளவுத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

அதாவது இந்திய இளைஞர்களுக்கு ஸ்பான்சர் விசாக்களை தயார் செய்து குருத்வாராக்களிலிருந்து வேலை வாய்ப்பு தருவதாகக் கூறி பயங்கரவாதிகள், சேர்த்துக் கொள்கிறார்கள்.அதுமட்டுமல்ல கனடாவில் சட்ட விரோதமாகத் தங்கி, அங்கேயே படித்து, வேலையில்லாத இளைஞர்கள் சுலபமாக இவர்கள் வலையில் விழுந்து விடுகிறார்கள்.

கனடாவில் இருக்கும் சில ஏஜென்சிகள், ஆட்கடத்தல் செய்தும், காலிஸ்தான் ஆதரவு சக்திகளுக்கு  உதவி வருவதாகவும் உளவுத்துறை  தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *