
எனக்கும் பாஜகவிற்கு எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக அறிவித்ததை ஏற்று கொள்ள முடியாது என்ற காரணத்தினால் தான் கூட்டணியில் இருந்து வெளியில் வந்தேன் என டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகே கேம்ப் ரோட்டில் சட்டமன்ற தொகுதி அமமுக செயல் கூட்டம் நடைபெற்றது. இதில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்று நிர்வாகிகளிடம் உரையாற்றினார்.
பின்னர் அவர், செய்தியாளர்களிடம் பேசிய போது, வருகிற தேர்தலில் அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என கூறினார்.
இதையடுத்து, கூட்டணிக் குறித்தக் கேள்விற்கு ஆளும் கட்சி திமுக கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி, விஜய் தலைமையில் கூட்டணி, சீமான் தலைமையில் கூட்டணி என நான்கு கூட்டணி உள்ளது என தெரிவித்தார்.
தொடர்ந்து, அமமுக கூட்டணி நிலைப்பாட்டை டிசம்பர் மாதம் தெரிவிப்பதாகக் கூறினார். பின்னர், எனக்கும் பாஜகவிற்கு எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக அறிவித்ததை ஏற்று கொள்ள முடியாது என்ற காரணத்தினால் தான் கூட்டணியில் இருந்து வெளியில் வந்தேன் என தெரிவித்தார்.
இதையடுத்து அவர், 2006 சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த ஏற்படுத்தியத் தாக்கத்தை விட விஜய் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துவார் என கூறினார். பின்னர், டிசம்பர் மாதம் தேர்தலுக்கான பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளோம் என தெரிவித்தார்.



