Kerala sexual assault case : முன்ஜாமின் கேட்கும் நடிகர் சித்திக்!

Advertisements

திருவனந்தபுரம் : பாலியல் அத்துமீறல் வழக்கில் சிக்கியுள்ள மலையாள நடிகர் சித்திக் , முன்ஜாமின் கோரி கேரள ஐகோர்ட்டில் மனு செய்துள்ளார்.

மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக இருந்தவருக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக புகார் எழுந்தது. மலையாள திரையுலகில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டியின் அறிக்கை சமீபத்தில் முதல்வர் பினராயி விஜயனிடம் சமர்பிக்கப்பட்டது.

இப்போ பரவாயில்ல.. அப்போ ரொம்ப மோசம்: பாலியல் அத்துமீறல்கள் குறித்து ராதிகா ‘பளீச்’
அதில், பட வாய்ப்புகளுக்காக பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும், பெரிய நடிகர்கள் கூட இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. இது நாடு முழுதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பிரபல மலையாளர் நடிகர் சித்திக் 2016ல் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அடுதடுத்து நடிகைகள் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்ற போலீசார், நடிகர் சித்திக்கிற்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர். எந்நேரமும் கைதாகலாம் என்ற நிலையில், தனக்கு முன்ஜாமின் வழங்கிட கோரி கேரள ஐகோர்ட்டில் நடிகர் சித்திக் மனு செய்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *