Kerala Lottery Agent: விற்பனையாகாத லாட்டரி டிக்கெட் மூலம் கோடீஸ்வரர்!

Advertisements

கேரளாவில் லாட்டரி ஏஜென்ட் ஒருவர் விற்பனையாகாத லாட்டரி டிக்கெட் மூலம் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.

கேரளாவில் அரசு அனுமதியின் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வாரத்திற்கு ஏழு நாட்களும் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு குளுக்கல் முறையில் பரிசுகள் தேர்வு செய்யப்படுகின்றன. வின்வின், ஃபிஃப்டி ஃபிஃப்டி, ஸ்திரி சக்தி, காருண்யா, நிர்மல், அஷயா, காருண்யா பிளஸ் உள்ளிட்ட பெயர்களில் லாட்டரி டிக்கெட்டுகளின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

ஆயிரங்களிலிருந்து கோடிகளில் பரிசுகள் விழுந்து ஆச்சர்யங்களை தந்து வருகிறது. பண்டிகை காலங்களில் விற்பனை செய்யப்படும் லாட்டரி டிக்கெட்டுகளுக்கு கோடிகளில் பரிசு அறிவிக்கப்படுவதால் போட்டிப்போட்டு கொண்டு லாட்டரிகள் விற்பனையாவது வழக்கம்.

அந்த வகையில் ஓணம் பண்டிகையைக் குலுக்கல் பரிசு கொண்ட75 லட்சம் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டின் ஓணம் பண்டிகை லாட்டரி பரிசு தொலை ரூ.15 கோடியிலிருந்து ரூ.25 கோடியாக அதிகரிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஏஜென்ட் ஒருவர் விற்பனையாகாத லாட்டரி டிக்கெட் மூலம் கோடீஸ்வரர் ஆன சம்பவம் கேட்போரை ஆச்சர்யப்பட வைத்துள்ளது. அதோலி பகுதியைச் சேர்ந்த என்கே காங்காதரன் என்பவர் 33 ஆண்டுகளாகக் கண்டக்டராகப் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த நாட்களாக லாட்டரி ஏஜென்டாக  இருந்து வருகிறார். இந்த நிலையில், அண்மையில் ஃபிப்டி ஃபிப்டி லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்த கங்காதரனுக்கு ஒரு டிக்கெட் மட்டும் விற்பனையாகாமல் இருந்துள்ளது.

அதில் அதிர்ஷ்டவசமாக விற்பனையாகாத டிக்கெட்டில் கங்காதரனுக்கு  ஒரு கோடி ரூபாய் பம்பர் பரிசு விழுந்துள்ளது. விற்பனையாகாத டிக்கெட்டை வங்கியில் செலுத்த சென்றபோது, அதில் ஒரு கோடி ரூபாய் பரிசு இருப்பது தெரிய வந்துள்ளது. 4 ஆண்டுகளாக லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த கங்காதரனுக்கு ஜாக்பாட் அடித்தது இதுவே முதல்முறை. இதன் மூலம் கங்காதரன் கோடீஸ்வரராகியுள்ளார். அதேநேரம் கங்காதரனிடம் லாட்டரி டிக்கெட் வாங்கிய 6 பேருக்குத் தலா ரூ.5000 பரிசு கிடைத்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *