Karnataka shopping mall : ஷாப்பிங் மாலுக்கு சீல்!

கர்நாடகா :

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள GT ஷாப்பிங் மாலுக்கு கடந்த செய்வாய்க்கிழமை இரவு வேட்டி கட்டி வந்த முதியவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம்
சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி கண்டனங்களை குவித்து வருகிறது.
வேட்டி கட்டிய அந்த முதியவர் படம் பார்ப்பதற்காக அந்த மாலுக்கு வந்துள்ளார்.மாலுக்குள் நுழையும் போது வேட்டி கட்டியவர்களுக்கு அனுமதி இல்லை,பேன்ட் மாற்றிக்கொண்டு வந்தால் அனுமாகிக்கிறோம் என மால் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

முதியவரிடம் ப்ரீ புக்கிங் செய்யப்பட்ட பட டிக்கெட் இருந்தும், வேட்டியை அனுமதிக்கக்கூடாது என்பது தங்களது மாலின் கொள்கைகளில் ஒன்று என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த முதியவர் விவசாயி என பின்னர் தெரியவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *