அம்மா நடிகை என்பதால் சிறு வயதிலேயே சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்கிற ஆசை கீர்த்திக்கு வந்தது. அதுவும், பள்ளியில் படிக்கும்போது நான் நடிகையாகி விஜய், சூர்யாவுக்கு ஜோடி போட்டு நடிப்பேன் எனத் தோழிகளிடம் சொல்வாராம் கீர்த்தி. பின்னாளில் அது அப்படியே நடந்தது.
5 மலையாள திரைப்படங்களில் சிறுமியாக நடித்திருக்கிறார். சினிமாவில் நடிக்கத் துவங்கி 15 வருடங்கள் கழித்து கதாநாயகி ஆனவர் கீர்த்தி சுரேஷ். அதற்கு முன்பு நடித்த 5 படங்களுமே சிறுமியாக இருந்தபோதுதான். ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படம்மூலம் தமிழ் சினிமாவில் நடிக்கத் துவங்கினார்.
அடுத்து தொடர்ந்து ஒரு மலையாள படத்தில் நடித்து விட்டுச் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினி முருகன் படத்தில் நடித்தார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பின் தனுஷுடன் தொடரி, சிவகார்த்திகேயனுடன் ரெமோ என டேக் ஆப் ஆனார். இவருக்கென ரசிகர்களும் உண்டானார்கள்.
அதன்பின் தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடிக்கத் துவங்கினார். தெலுங்கில் மகாநடி படத்திற்காகச் சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றார். விஜயுடன் பைரவா, சர்கார் ஆகிய படங்களில் நடித்தார். நயன்தாராவைப் போலக் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள சில கதைகளிலும் நடித்தார்.
இவரின் நடிப்பில் கடந்த மாதம் ரகு தாத்தா என்கிற படம் வெளியானது. ஆனால், அப்படம் சரியாகப் போகவில்லை. இப்போது ஒரு ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார். ஒருபக்கம், வாய்ப்புகளைத் தக்க வைப்பதற்காக அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அப்படி, கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.