Katchatheevu Island Issue: கச்சத்தீவு குறித்து இப்போது தான் தெரியுமா? அண்ணாமலைக்கு செல்லூர் ராஜூ கேள்வி!

Advertisements

20 ஆயிரம் புத்தகம் படித்த அண்ணாமலைக்கு கச்சத்தீவு குறித்து இப்போது தான் தெரியுமா? என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்!

“கச்சத்தீவை தாரைவார்த்தது குறித்து ஆர்.டி.ஐ., மூலமாகக் கண்டறிந்ததாக அண்ணாமலை தெரிவிக்கிறார். பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த பா.ஜ.க., தற்போது புதிதாகக் கண்டறிவது போலப் பேசுகின்றது. எல்லாம் தெரிந்த மெத்த மேதாவிகள் பேசுகின்ற நபர்களுக்குத் தற்போது தான் கச்சத்தீவு குறித்து தெரியுமா?. கச்சத்தீவு குறித்து அம்மா அவர்கள் 2006ம் ஆண்டே ஆர்ப்பாட்டம், போராட்டம் எனப் பல்வேறு எதிர்ப்புகளை முன்னெடுத்தார். *மீன் சுவையாக இருக்கிறது, என எல்லை தாண்டி மீன்பிடிக்கும் நபர்களைப் பூப்போட்டா வரவேற்பார்களா? துப்பாக்கி வைத்துத் தான் சுடுவார்கள்* எனக் கலைஞர் அவர்கள் கொச்சையாகப் பேசினார்கள்.

இதை எல்லாத்தையும் எதிர்த்தவர் அம்மா. மெத்தை, மேதாவி, 20 ஆயிரம் புத்தகம் படித்த அண்ணாமலை இதையெல்லாம் ஏன் படிக்காமல் விட்டார். மீனவர் பாதிப்புகுறித்து எப்படி தெரியாமல் இருந்தார். கச்சத்தீவை கலைஞர் அவர்கள் 1974-ல் தாரைவார்த்தார், ஆனால் இதெல்லாம் தெரியாமல் அண்ணாமலை இதனை ஆர்.டி.ஐ., மூலம் தெரிந்துகொண்டேன் என்கிறார். மீனவர்கள் பாதிப்புகுறித்து தெரியாமல் இருந்துள்ளார். இதற்கு ஆர்.டி.ஐ தான் தேவையா? மத்தியில் ஆட்சியில் இருப்பதால் உளவுத்துறை மூலமாகத் தெரிந்து கொண்டிருக்கலாம். செல்போனில் வாய்ஸ் ரெக்கார்ட்டில் பேசுவதை எடுக்கக்கூடிய அண்ணாமலைக்கு மீனவர் பிரச்சினைக்குத் தெரியாமல் போச்சே!

*அண்ணாமலை வண்டி தான் டெல்லிக்கு செல்லும் என்கிறாரே? என்ற கேள்விக்கு*

எந்த வண்டி டெல்லிக்கு போகும், எந்த வண்டி டெல்லிக்கு போகாது என்று மக்கள் தான் தீர்ப்பு அளிப்பார்கள். இதனை அண்ணாமலையார் தீர்மானிக்க? மக்கள் தான் எஜமானர்கள். அண்ணாமலை என்ன ஞானியா? அரசியலுக்காக எதுவென்றாலும் அண்ணாமலை பேசலாம். எந்த வண்டி டெல்லிக்கு போகும் என்று தேர்தலின்போது மக்கள் முடிவு செய்வார்கள்.

*பி.ஜே.பி., குறித்து விமர்சனம் செய்யும் உங்களுக்கு அமலாக்கத்துறை மீது பயம் இல்லையா?*

மடியில் கணமில்லை வலியில் பயமில்லை. அமலாக்கத்துறை குறித்து எங்களுக்கு எந்தப் பயமும் இல்லை. சிறையே எங்களுக்காகத் தான் கட்டப்பட்டுள்ளது. வெள்ளைக்காரன் வாய்ப்புட்டு சட்டமே எங்களுக்காகத் தான் கொண்டு வந்தான். இப்ப இல்லை அப்போது அழகிரி அதிகாரத்தில் இருக்கும்போதே அவருக்கு எதிராக அரசியல் செய்தவன் நான். அழகிரி மிகப் பெரிய ஜாம்பவானாக இருந்தார். மதுரை மீனாட்சி, சொக்கநாதருக்கு மேலாகவே செல்வாக்கு என்பது போல் அழகிரி ஆதரவாளர்கள் துதி பாடினார்கள். ஆனால் தற்போது அவர்கள் எல்லாரும் எங்க இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பசை இருக்கும் இடத்தைத் தேடி சென்று விட்டார்கள். இதற்கெல்லாம் பயப்படமாட்டோம்.

*தி.மு.க., குறித்து விமர்சனம்குறித்த கேள்விக்கு*
தி.மு.க., நல்லது செய்தால் வரவேற்போம். என்ன செய்தார்கள் திமுக. ஒன்றும் செய்யவில்லை. நாங்கள் தி.மு.க., வை நியாயமான முறையில் தான் விமர்சனம் செய்கிறோம்” என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *