பாலியல் வன்கொடுமை செய்து மூதாட்டி கொலை – இளைஞர் கைது !

சென்னை: 

நீலாங்கரையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்ததாக இளைஞர் கைது செய்யப்பட்டார். நீலாங்கரை பாண்டியன் சாலையில் 60 வயது மதிக்கத் தக்க மூதாட்டி ஒருவர் கடந்த வியாழக்கிழமை இறந்து கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள், நீலாங்கரை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் விரைந்து சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த மூதாட்டி அதே பகுதியைச் சேர்ந்த சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். அவரைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பகுதியைச் சேர்ந்த இறைச்சிக்கடை ஊழியர் வினோத் (32) என்பது விசாரணையில் தெரியவந்தது. போலீஸார் அவரைக் கைது செய்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *