Suella Braverman: பதவி நீக்கம்!

இங்கிலாந்து உள்துறை அமைச்சர் பதவி நீக்கம்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிரேவ்மென் உள்துறை அமைச்சராக இருந்தவரை பதவி நீக்கம் செய்து பிரதமர் ரிஷிசுனக் உத்தரவு..!!

பாலஸ்தீன பேரணியை பற்றி விமர்சித்து கருத்து தெரிவித்ததற்காக பதவி  நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 2022 அக்டோபர் மாதம் முதல் பதவி வகித்து வந்த மூத்த அமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலஸ்தீன ஆதரவு பேரணியை போலீசார் கையாண்ட விதம் குறித்து பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கடந்த வாரம் தெரிவித்த கருத்துகளைத் தொடர்ந்து, தனது மிக மூத்த அமைச்சர்களில் ஒருவரான உள்துறை அமைச்சர் சூயெல்லா பிரேவர்மனை பதவி நீக்கம் செய்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் திங்களன்று தெரிவித்தன.

கடந்த வாரம் சுனக்கை எதிர்த்த சுயல்லா சனிக்கிழமை நடந்த பேரணியை போலீசார் கையாண்ட விதத்தை விமர்சித்து ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தார். அவர்  வெளியிட்ட கருத்துகள் வன்முறையை தூண்டுவதாக அமைந்திருப்பதாக உள்ளதாக அனைத்து தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்த நிலையில்,  பிரதமர் ரிஷிசுனக் சுயல்லாவை உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *