மகனின் கண் முன்னே லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த தாயார்!

Advertisements
கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் அருகே மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற மூதாட்டி ஒருவர் சாலையை கடக்க முயற்சிக்கையில் குறுக்கே வந்த டிப்பர் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி உடல் சிதைந்து உயிரிழந்தார். கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர்  வில்வமரத்து கருப்பராயன் கோவில் குடமுழுக்கு விழாவில   கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்த வேலூர் மாவட்டம் கண்ணமாங்குளம் கீழப்பட்டி கிராமத்தை சேர்ந்த சாவித்திரி (65)என்பவர் குடமுழுக்கு நிகழ்ச்சி முடிந்த பின்னர் சொந்த ஊருக்கு செல்வதற்காக தனது மகன் வெங்கடேஷ் என்பவரின் மொபட்டில் ஏறி கோபி பேருந்து நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
 இந்நிலையில் மகன் வெங்கடேஷ் உடன் இருசக்கர வாகனத்தில்   பேருந்து நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது   போக்குவரத்து நெரிசல் காரணமாக வெங்கடேஷ் வண்டியை நிறுத்த  முயற்சிப்பதற்குள் வண்டியில் பின்னால் அமர்ந்திருந்த அவரது தாயார்  சாவித்திரி பேருந்து நிலையம்  வந்துவிட்டது என அவசரமாக வண்டியில் இருந்து குதித்து சாலையை  கடக்க முயற்சிக்கையில் எதிர்பாராத விதமாக சாலையில்  வந்துகொண்டிருந்த டிப்பர் லாரியின் பின் சக்கரத்தில் தடுமாறி விழுந்தார். இதனை அறியாத லாரி ஓட்டுநர் சில அடி தூரம் சென்று லாரியை நிறுத்திய போது லாரியின் பின் சக்கரம் சாவித்திரியின் மீது ஏறியதில்   உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கோபி போலீசார் லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிழந்த நிலையில் கிடந்த சாவித்திரியின் உடலை கைப்பற்றி கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தபின் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில் திருவிழாவிற்கு வந்து சாமிதரிசனம் செய்து விட்டு ஊருக்கு திரும்பிச்செல்லும் வழியில் மகனின் கண் எதிரே தாயார் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அவர்ரகளின் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *