DMK Student Wing: 1 ந்தேதி மாபெரும் மாணவர் பேரணி!

Advertisements

தி.மு.க. மாணவர் அணியின் மாவட்ட, மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் நேற்று கோவை பீளமேடு சுகுணா கலையரங்கில் மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது.

சென்னை: இதில் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- மாநில உரிமைகளை மீட்போம் வளமான தமிழ் நாட்டை உருவாக்குவோம் வலிமைமிக்க இந்தியாவை காப்போம் என்ற பணியினை கழக மாணவர் அணியினர் வருங்கால தலைமுறையினராய் விளங்குகின்ற மாணவர்களிடம் கொண்டு சேர்ப்போம். வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலை வென்று காட்டுவோம். இந்திய ஒன்றியத்தை பாசிசத்திடம் இருந்து மீட்டெடுப்போம்.

தேசிய கல்விக்-கொள்கை 2020 மற்றும் அதை கொண்டு வந்த பாசிச பா.ஜ.க. அரசை நிராகரிப்போம் இந்தியாவை காப்போம் கல்வி உரிமையை காப்போம் என்ற முழக்கத்தோடு, கடந்த 12.1.2023 அன்று தலைநகர் டெல்லியில்-பாராளுமன்றம் நோக்கிய மாபெரும் மாணவர் பேரணி எழுச்சியுடன் நடைபெற்றது.

அப்பேரணியில் பல்வேறு மாணவர் அமைப்புகள் பங்கேற்றிருந்தாலும், நமது கழக மாணவர் அணியினரின் பங்களிப்பு பெருமளவு எழுச்சியை தந்தது.

இந்தியாவின் வடக்கே நடைபெற்ற பேரணியைத் தொடர்ந்து, தெற்கே சென்னையில் “மாபெரும் மாணவர் பேரணி” யுனை டெட் ஸ்டூடென்ஸ் ஆப் இந்தியா கூட்டமைப்பு நடத்த முடிவெடுத்ததன் அடிப்படையில், வருகிற 1-ந்தேதி சென்னையில் மாபெரும் மாணவர் பேரணி நடைபெற உள்ளது. இப்பேரணியில் இந்திய அளவிலான பல்வேறு மாணவர் அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்ளவுள்ள நிலையில், பேரணியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைக்கிறார்.

பேரணியின் நிறைவில், கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எழுச்சியுரை ஆற்ற உள்ளார்.இந்தியாவை காக்கவும், மாணவர்களின் கல்வி உரிமையை காக்கவும் நடைபெறும் இம்மாபெரும் பேரணியில், தி.மு.க.மாணவர் அணியின் மாவட்ட, மாநில நிர்வாகிகள், மாணவர் அணியினர், தமிழ்நாடு, புதுவையில் உள்ள பல்வேறு கல்லூரிகளின் தி.மு.க. மாணவர் அமைப்பைச் சார்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொள்வது.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சென்னையில் ராபின்சன் பூங்கா அருகில் இருந்து இந்த பேரணியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *