Kanchipuram New Library: ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நூலகம் திறப்பு!

Advertisements

நூலக வாசகர்களின் கோரிக்கையை ஏற்று ரூ.60 லட்சம் மதிப்பில் புதிய இரண்டு அடுக்கு நூலகத்தை வாசகர்கள் முன்னிலையில் திறந்து வைத்த காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர்.

காஞ்சிபுரம் மாவட்ட நூலகத் துறை சார்பில் ஏகாம்பர நாதர் சன்னதி தெருவில் புகழ்பெற்ற நூலகம் அமைந்துள்ளது. இதில் 8,000 பேர் உறுப்பினராகவும் 70க்கும் மேற்பட்ட பல்வேறு தலைப்பிலான புத்தகங்கள் உள்ளது. இது மட்டும் இல்லாமல் பல்வேறு வகையான தினசரி நாளிதழ்கள் வருவதால் பொதுமக்கள் வாசகர்கள் என அனைவரும் இதனை நாடி வருகின்றனர்.

அரசு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கான நூலகத்தில் இணையதள வசதியும் இங்கு உள்ளது. இதற்கு முன்பு இருந்த பழமையான நூலகம் இட வசதி குறைவு காரணமாக அதை விரிவு படுத்த வேண்டும் என நூலக வாசகர்கள் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம். பி.எழிலரசனிடம் கோரிக்கை வைத்தனர்.

இக்கோரிக்கையை ஏற்று 2019 – 20 தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 30 லட்சமும், பொது நிதியிலிருந்து ரூபாய் 30 லட்சம் என மொத்தம் ரூபாய் 60 லட்சம் மதிப்பில் இரண்டு அடுக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணி துவங்கப்பட்டு பணி நிறைவடைந்து இன்று புதிய நூலக கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.

இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் வாசகர்கள் கோரிக்கையை ஏற்று புதிய நூலக கட்டிடத்தை நூலக வாசகர் முன்னிலையில் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். மேலும் நூலகத்தில் உள்ள புத்தகங்களை பார்த்து மேலும் கூடுதலாக புதிய புத்தகங்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என வாசகர்களுக்கு உத்தரவு அள்ளித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *