‘J&K Terror Links’: தீவிரவாதிகளுடன் தொடர்பில் மருத்துவ சங்கத் தலைவர்!

Advertisements

ஜம்மு-காஷ்மீரில்  தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த  மருத்துவ சங்கத் தலைவர் உட்பட 4 அரசு ஊழியர்கள்  நீக்கம்..

ஜம்மு-காஷ்மீர் அரசு தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த யூனியன் பிரதேச  அரசு ஊழியர்கள்  நான்கு பேரைப் பணியிலிருந்து நீக்கியுள்ளது. அந்த நால்வரும் காஷ்மீர் மருத்துவ  சங்கத்தின் தலைவர்  மற்றும் ஆசிரியர் , காவலர்  மற்றும்  பரிசோதனை மைய அலுவலர் ஆவார்கள். ஒரு நல்ல அரசுப் பணியில் இருக்கும் அவர்கள் நாட்டுக்கு எதிராகத் தீவிர்வாதிகளுடன் செயல்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர்கள்மீது 311(2) (C) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நாட்டுக்குத் துரோகம் செய்த குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர மேலும் 59 பேர் தொடர்பில் உள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது. காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் இரண்டு குடியிருப்பு வாசிகளையும் கைது செய்துள்ளது. நவம்பர் 22 -ஆம் தேதி காலை அவர்கள் கைது நடந்துள்ளது.

மும்தாஜ் அகமது(38) S/O காதிர் மற்றும் ஜஹாங்கிர் அகமது (29) S/O மொகைதின்  இருவரும் ட்ரெகம் மற்றும் குப்வரா பகுதியில் வசிப்பவர்கள். அவர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள் 6  வெற்று  பத்திரிகைகள் கைப்பற்றப்பட்டன.  அவர்கள்மீது 128/2023, பிரிவு 7/25 பிரிவுகளிலும் , ஆர்ம்ஸ் ஆக்ட் 13,18,23,39 ஆகிய விதிகளின் படியும் UAPA   பதிவு செய்யப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை அறிவித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *